கோயம்பேடு மார்க்கெட்டில் துணை முதல்வர் ஓபிஎஸ் திடீர் ஆய்வு

சென்னை: கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊடரங்கு உத்தரவு அமலில் உள்ளது. இது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று முன்தினம் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மாநகராட்சி அதிகாரி கார்த்திகேயன், கோயம்பேடு மார்க்கெட் நிர்வாக அலுவலர் கோவிந்தராஜ் மற்றும் அதிகாரிகள், மார்க்கெட்டில் உள்ள வியாபாரிகள், தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களிடையே கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். அவர்களுக்கு தேவையான முககவசம், கையூறை, சோப்பு ஆகிய உபகரணங்கள் வழங்கி வருகிறோம்.மார்க்கெட் முழுவதும் தீயணைப்பு வாகனங்கள் மூலமாக கிருமிநாசினி தெளித்து வருகிறோம்.

மேலும், பெரிய டிரோன் மூலம் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது’’ என்று கூறினர். இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் கூறுகையில், ‘’மார்க்கெட்டுக்கு வரும் பொதுமக்களுக்கு முககவசம் வழங்கி கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தினமும் கிருமிநாசினி தெளிக்க வேண்டும். காய்கறி வாங்கும் மக்கள், கட்டம் கட்டப்பட்டுள்ள இடத்தில் 3 அடி தொலைவில் நின்று பொருட்களை வாங்க வேண்டும்’’ என்று அறிவுறுத்தினார்.

Related Stories: