வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள 19,120 பேரை கண்காணிக்க தனிப்படை: 300 சதவீதம் பாதுகாப்பாக இருக்க உத்தரவு

சென்னை: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சென்னையில் 19,120 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களை கண்காணிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்கள், 300 சதவீதம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தியுள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஏப்ரல் 14ம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் ெபாதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு மட்டும் வெளியே வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக வெளிநாடு சென்று திரும்பியவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். குறிப்பாக, சென்னையில் 19,120 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு, தொடர் கண்காணிப்பில் உள்ளனர். இவர்கள், வீடுகளை விட்டு வெளியே வரக் கூடாது  என்று உத்தரவிடப்பட்டு, இதை கண்காணிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் வீட்டு கண்காணிப்பில் உள்ளவர்கள் 300 சதவீதம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும், கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும் என்றும் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:வீடுகளின் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளவர்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் வெளியே வர வேண்டும். வெளியே வரும்போதும், வீட்டுக்கு உள்ளே இருக்கும் போதும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும். இவர்கள் அனைவரும் 300 சதவீதம் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அத்தியாவசதி பொருட்களை  வாங்க உரிய ஏற்பாடுகளை செய்துெகாள்ள வேண்டும். வீட்டின் வெளியே பொருட்களை வைத்து பொருட்களை வாங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: