பிரிட்டனில் பிரதமர் போரிஸ், சுகாதாரத்துறை அமைச்சர் உள்ளிட்டோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் 1,019 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிப்பு

பிரிட்டன் : உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது. சீனாவில் தொடங்கிய இந்த வைரஸ் உலகை ஆட்டி படைத்து வருகிறது. உலகம் முழுவதும் 192 நாடுகளுக்கும் மேலாக கொரோனா வைரஸ் பரவி கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதுவரை, உலகளவில் 27,352 பேர் உயர்ந்துள்ளனர். 5,94,687 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், வைரசால் பாதிக்கப்பட்ட 1,33,057 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 19 உயிரிழந்துள்ளனர். 918 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுக்க 21 நாள் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. இதில் பிரிட்டனிலும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இளவரசர் சார்லஸ் , பிரதமர் போரிஸ் ஜான்சன் , சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் செயலாளர் கொரோனா தொற்று ஏற்பட்டு தங்களை தனிமைப்படுத்தி கொண்டுள்ளனர். இந்த நிலையில் பிரிட்டனில் மொத்தம் 1,20,776 பேருக்கு சோதனை மேற்கொண்டதாகவும் அதில் சுமார் 17,089 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 1,019 பேர் பலியாகி உள்ளதாக இங்கிலாந்து சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Related Stories: