கடந்த 24 மணி நேரத்தில் 3,000 பேர் பலி: உலகளவில் கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 27,532 ஆக உயர்வு

வாஷிங்டன்: சீனாவின் வுகான் நகரில் கடந்த டிசம்பரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் பரவி உள்ளது. சீனாவில் இந்த வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், கடந்த சில நாட்களாக இத்தாலி,  அமெரிக்கா, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் காட்டுத்தீ போல பரவி வருகிறது. குறிப்பாக அமெரிக்காவில் கடந்த 4 நாட்களாக புதிதாக வைரஸ் தொற்று வேகமாக பரவுகிறது. இந்த வைரஸ் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை.

Advertising
Advertising

இதற்கிடையே, உலகளவில் கொரோனா வைரசுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகளவில் நேற்று 24 ,341 பேர் உயிரிழந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 3,000 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்  மூலம் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 27,352 ஆக உயர்ந்துள்ளது. உலகளவில் 5,94,687 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், வைரசால் பாதிக்கப்பட்ட 1,33,057 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியா முழுவதும்  கொரோனா வைரஸ் காரணமாக 19 உயிரிழந்துள்ளனர். 748 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தை பொருத்தவரை 38 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மதுரையை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Related Stories: