சென்னை : சென்னை பட்டினப்பாக்கம் எம்ஆர்சி நகரில் வசித்து வந்தவர் டாக்டர் சேதுராமன் (37). இவர் நடிகர் சந்தானத்துடன் இணைந்து ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தில் கதாநாயகனாக அறிமுகம் ஆனார். மேலும் பல படங்களில் சந்தானத்துடன் இணைந்து நடித்தார். தற்போது 50 - 50 என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு தன் வீட்டில் இருந்த சேதுராமனுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது.