கொரோனா நிவாரணத்துக்கு எம்பி, எம்எல்ஏக்கள் ஒரு மாதம் ஊதியம் வழங்க முடிவு: அதிமுக அறிவிப்பு

சென்னை: கொரோனா வைரஸ் நிவாரண நடவடிக்கைகளுக்காக எம்பி, எம்எல்ஏக்கள் ஒரு மாத ஊதியத்தை வழங்குவார்கள் என்று ஆதிமுக அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் சிறப்பு நிவாரண நடவடிக்கைகளுக்காக முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் அதிமுக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஒரு மாத ஊதியத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடையாக வழங்குவார்கள்.

மேலும் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.1 கோடி, சட்டமன்ற உறுப்பினர்கள் அவரவர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.25 லட்சம் கொரோனா வைரஸ் சிறப்பு நிவாரண நடவடிக்கைகளுக்காக ஒதுக்கீடு செய்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: