தமிழக மக்களுக்கும், மருத்துவ பணியாளர்களுக்கும் முகக் கவசம், சேனிட்டைசர் வழங்க திமுகவினருக்கு ஸ்டாலின் அழைப்பு

சென்னை :தமிழகத்தில் மக்களுக்கும் மருத்துவப் பணியாளர்களுக்கும் முகக்கவசம், சோப்பு, சானிடைசர் வழங்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். சீனாவின் வூகான் நகரில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை கொலை நடுங்க செய்து வருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரசால் 650க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,16 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் 2 பேர் பலியான நிலையில், 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மத்திய, மாநில அரசுகள் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Advertising
Advertising

இதனிடையே கொரோனா பரவலை தடுக்க அடிக்கடி கைகளை கழுவ வேண்டும் என்று பல தரபட்ட விழிப்புணர்வுகள் மூலம் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் மக்களுக்கும்  மருத்துவப் பணியாளர்களுக்கும் முகக்கவசம், சோப்பு, சானிடைசர் வழங்க வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். இது குறித்து அவர் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், துயரம் சூழ்ந்த இச்சூழலில் மக்களுக்கும், மருத்துவ பணியாளர்களுக்கும் முகக் கவசம், சேனிட்டைசர், சோப்பு ஆகியவற்றைத் திரட்டி வழங்கும் சேவையை திமுக MLAs & MPs செய்ய வேண்டும்.#CoronaVirus தாண்டவமாடும் நேரத்தில் கைகொடுக்கும் தோழர்களாய் நாம் செயல்பட வேண்டும்!, எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories: