எழும்பூர் திரையரங்கம் பகுதியில் சுற்றித்திரிந்த ஜப்பான் நாட்டு முதியவரால் பீதி: தனிமை வீட்டுக்கு அனுப்பி வைப்பு

சென்னை: எழும்பூரில் சுற்றி திரிந்த ஜப்பான் நாட்டு முதியவரால் கொரோனா பீதி ஏற்பட்டது. பின்னர் மாநகராட்சி அதிகாரிகள் அவரை பிடித்து தனிமைப்படுத்தி விசாரணை நடத்தி வருகின்றனர். கொரோனா பரவலை தடுக்கும் வகையில் 21 நாள் ஊரடங்கு இந்தியா முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது. நேற்று காலை சென்னை எழும்பூர் தனியார் திரையரங்கம் அருகே வெளிநாட்டு நபர் ஒருவர்  சாலையில் சுற்றி வந்துள்ளார். இதை பார்த்த பொதுமக்களில் சிலர் கொரோனா ெதாற்று ஏற்பட்டுவிடுமோ? என்ற அச்சத்தில்அலறி அடித்து ஓடினர். இதுகுறித்த தகவலின்பேரில் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் வெளிநாட்டு வாலிபரிடம் 5 அடி தொலைவிலேயே நின்றபடி விசாரணை நடத்தினர். விசாரணையில் ஜப்பான் நாட்டை சேர்ந்த சடோரோ சொமாயா (65) என்பதும், கடந்த மார்ச் மாதம் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு வந்துள்ளார்.

உலக முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையால் இந்தியாவில் இருந்து வெளிநாடு செல்லும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் சடோரோ சொமாயா சென்னையில் இருந்து சொந்த நாடான ஜப்பான் நாட்டிற்கு செல்ல முடியாமலும், தங்க இடம் மற்றும் உணவு இல்லாமல் சுற்றி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் சடோரோ சொமாயாயை தனிமைப்படுத்தியுள்ளனர். பின்னர் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு  அளித்த தகவலின்படி ஜப்பான் நாட்டு முதியவரை அதிகாரிகள் மீட்டு தனிமைப்படுத்தி விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சம்பவம் குறித்து அதிகாரிகள் ஜப்பான் நாட்டு தூதரக அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்துள்ளனர். இந்த சம்பவத்தால் எழும்பூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: