மதுரை ராஜாஜி மருத்துவமனையில் பரிசோதனை மையத்துக்கு அனுமதி: கொரோனா ஆய்வகத்தின் எண்ணிக்கை 8 ஆக உயர்வு

சென்னை: மதுரை ராஜாஜி மருத்துவமனையில் கொரோனா ஆய்வகம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.  தமிழகத்தில் தற்போது வரை 23 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 45 வயது பொறியாளர் குணமடைந்துவிட்டார். மதுரையைச் சேர்ந்த முதியவர் சிகிச்சை பலன் அளிக்காமல் மரணம் அடைந்துவிட்டார். இந்நிலையில் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மையம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இது உடனடியாக செயல்பாட்டுக்கு வரும் எதிர்பார்க்கப்படுகிறது.  கொரோனா அறிகுறி உள்ளவர்களின் ரத்த மாதிரிகளை ஆய்வு செய்ய சென்னையில் கிங்ஸ் மருத்துவமனை, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை, தேனி, திருவாரூர், நெல்லை, கோவை, சேலம் அரசு மருத்துவமனை ஆகிய 7 இடங்களில் பரிசோதனை மையங்கள் செயல்பட்டு வருகிறது. தற்போது எட்டாவதாக மதுரை மருத்துவக் கல்லூரியில் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

Related Stories: