கொரோனாவில் இருந்து பாதுகாக்க கோவை மத்திய சிறையில் மாஸ்க் தயாரிக்கும் கைதிகள்

கோவை: கோவை மத்திய சிறையில் முக கவசம் தயாரிக்கும் பணியில் கைதிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ள மாஸ்க் அணிவது, வசிப்பிடங்களில் கிருமி நாசினி தெளிப்பது, கைகளை சோப்பு போட்டு நன்றாக கழுவுவது உள்ளிட்டவற்றை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் முக கவசத்துக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் தொழிற் கூடங்கள் மூலமாக மாஸ்க் தயாரிக்கப்பட்டு ரூ.10 முதல் 20 வரை கலெக்டர் அலுவலகம், கமிஷனர் அலுவலகம் உள்ளிட்ட முக்கிய இடங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் விற்பனை செய்து வருகின்றனர்.

மெடிக்கல்களிலும் கிடைக்கிறது. இருப்பினும் மாஸ்க் அனைவருக்கும் போதுமானதாக இல்லாமல் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில், கோவை மத்திய சிறையில் 10க்கும் மேற்பட்ட கைதிகள் மாஸ்க் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு தயாரிக்கப்படும் மாஸ்க்குகள் கைதிகள், சிறை அதிகாரிகள் மற்றும் அரசு ஆஸ்பத்திரிக்கு விநியோகம் செய்யப்பட இருப்பதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: