கொரோனா தாக்கம் எதிரொலி வீட்டில் இருந்து ஆய்வு நடத்திய அமைச்சர்: வீடியோ கான்பரன்ஸ் மூலம் கூட்டங்களை நடத்த முடிவு

சென்னை : கொரோனா தாக்கம் காரணமாக சுகாதாரத்துறை அமைச்சர் கள ஆய்வுக்கு நேரடியாக செல்லாமல் வீட்டில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் அதிகாரிகளிடம் ஆலோசனை கூட்டங்களை நடத்தினார்.  கொரோனா பரவலை தடுக்க தினசரி பல்வேறு இடங்களில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு செய்துவந்தார். நேற்று மக்கள் ஊரடங்கையொட்டி அவரும் வீட்டைவிட்டு வெளியே வரவில்லை. அதற்கு பதிலாக வீட்டில் இருந்தபடியே அனைத்து துறை அதிகாரிகளுடன் காணொலி காட்சி மூலம் கலந்தாய்வு மேற்கொண்டார்.

இதில் பொது சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி உள்ளிட்ட அதிகாரிகள்  அவர்கள் அலுவலகத்தில் இருந்து கலந்து கொண்டனர். இனிஆலோசனை கூட்டங்கள் காணொலி காட்சி மூலம் நடைபெறும் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். ஒரே இடத்தில் அனைவரும் கூடுவதை தடுக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

Related Stories: