கொரோனா ரத்த பரிசோதனை: தமிழகத்தில் மேலும் மூன்று ஆய்வகங்கள்: செயல்பாட்டுக்கு வந்தது

சென்னை: கொரோனா ரத்த பரிசோதனை செய்வதற்கு தமிழகத்தில் கூடுதலாக மூன்று ஆய்வகங்கள் அமைக்க மத்திய அரசு அனுமதி  அளித்துள்ளது. இது உடனடியாக செயல்பாட்டுக்கு வந்தது.கொரோனா வைரசுக்கு காய்ச்சல், சளி, இருமல் ஆகியவை அறிகுறியாகும். ஒருவருக்கு காய்ச்சல் அதிகமாக இருந்தால் அவரின் ரத்த  மாதிரிகளைஉடனடியாக ஆய்வுக்கு அனுப்ப வேண்டும்.

இவ்வாறு கொரோனா அறிகுறி உள்ளவர்களின் ரத்த மாதிரிகளை ஆய்வு செய்ய சென்னையில்  கிங்ஸ் மருத்துவமனை, தேனி, திருவாரூர், நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் ரத்த மாதிரிகள் ஆய்வகம் உள்ளது.இந்நிலையில்  கூடுதலாக சென்னையில் ராஜிவ் மருத்துவமனை, கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, சேலம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில்  கொரோனா ரத்த மாதிரி ஆய்வகம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இவைஉடனடியாக பயன்பாட்டுக்கு வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: