பொன்னை சோதனைச்சாவடியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை

பொன்னை: கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க மக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ், ரயில் நிலையம், வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட இடங்களில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. சுகாதாரத்துறை சார்பில் கிருமி நாசினியும் தெளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழக-ஆந்திர எல்லையான பொன்னை சோதனைச்சாவடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை வேலூர் கலெக்டர் சண்முகசுந்தரம், எஸ்பி பிரவேஷ்குமார் ஆகியோர் நேற்று பார்வையிட்டனர். அப்போது, ஆந்திர எல்லையிலிருந்து தமிழகம் வந்த வாகனங்களுக்கு சுகாதாரத்துறை சார்பில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. மேலும், பயணிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.

 

இதில், காட்பாடி பிடிஓ சாந்தி, டிஎஸ்பி துரைபாண்டியன், வட்டார சுகாதார மருத்துவர் சுமதி, சுகாதார ஆய்வாளர் ஜெகதீவன்ராம் மற்றும்  ெபான்னை இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.  திருவலம்: திருவலம் அடுத்த சேர்க்காடு கூட்ரோட்டில் சோதனை சாவடியில் கலெக்டர் சண்முகசுந்தரம், எஸ்பி பிரவேஷ்குமார் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சித்தூர் வழியாக பெங்களூரு, மங்களுர், மும்பை மற்றும் மைசூரில்

இருந்து சென்னைக்கு செல்லும் வாகனங்களில் பயணிகளின் இருக்கைகள், பேருந்தின் டயர்கள், பேருந்தில் பயணிகள் கை வைக்கும் இடங்கள், பேருந்தின் உட்புறம், வெளிபுறத்தில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு லைசோல் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

இதனை கலெக்டர் பார்வையிட்டார். தொடர்ந்து, பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டுபிரசுரங்களை வழங்கினார். அப்போது அவ்வழியாக வந்த காரை தடுத்து சோதனையிட்ட போது அதில் பெங்களூருவில் இருந்து சென்னைக்கு செல்ல வந்த வெளிநாட்டு தம்பதிகள் மற்றும் அவர்களின் குழந்தைகள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, அவர்களை தெர்மல்ஸ்கேனர் கருவி மூலம்

கோரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது தெரிய வந்து வாகனத்தை செல்ல அனுமதித்தனர். இதில் வருவாய்துறையினர், மருத்துவகுழுவினர்,ஊராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: