சென்னையில் அனுமதியின்றி போராட்டம் நடத்திய 5,000 பேர் மீது வழக்குப்பதிவு

சென்னை: குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கடந்த ஏப்ரல் மாதம் 14ம்தேதி வண்ணாரப்பேட்டை, லாலாகுண்டா பகுதியில் முஸ்லிம்கள் போராட்டம் தொடங்கினர். இதனிடையே, கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் நாட்டு மக்கள் பீதியில் உள்ளனர். இதன் எதிரொலியால் இஸ்லாமிய அமைப்பினர் போராட்டத்தை கைவிடும்படி பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்படி 33 நாட்களுக்கு பிறகு கடந்த 17ம்தேதி போராட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் அமைப்பு சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற கோரி சென்னை குறளகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தகவலறிந்து வந்த எஸ்பிளனேடு போலீசார், போராட்டம் நடத்தியது தொடர்பாக 6 பிரிவுகளின் கீழ் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் அமைப்பு தலைவர் சாகுல், பொருளாளர் அப்துல்ரகீம் உள்ளிட்ட 5 ஆயிரம் பேர் வழக்குப்பதிந்துள்ளனர்.

Related Stories: