பழவேற்காடு ஏரி முகத்துவாரத்தில் மணல் தேங்குவதை தடுக்க ரூ.27 கோடியில் நிரந்தர தடுப்பு சுவர் அமைக்கப்படும்: தமிழக அரசு தகவல்

சென்னை: பழவேற்காடு ஏரி முகத்துவாரத்தில் மணல் தேங்குவதை தடுக்க ரூ.27 கோடியில் நிரந்தர தடுப்பு சுவர் அமைக்கப்படும் என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. பழவேற்காடு ஏரி முகத்துவாரத்தை தூர்வாரக் கோரி மீனவர் உஷா வழக்கு தொடர்ந்துள்ளார். ஏரி முகத்துவாரத்தில் தேங்கிய மணல் ரூ.1.5 கோடி செலவில் தற்காலிகமாக அகற்றம் செய்யப்படும் என அரசு தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories: