தயாரிப்பாளர் சங்க தேர்தல்: சிவா தலைமையில் தனி அணி

சென்னை: தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கு வருகிற ஜூன் மாதம் தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் பல்வேறு அணிகள் போட்டியிட தயாராகி

வருகிறது. சத்யஜோதி தியாகராஜன் தலைமையில் ஒரு அணியும், விஷால் தலைமையில் ஒரு அணியும், டி.சிவா தலைமையில் ஒரு அணியும் போட்டியிடலாம் என்று ெதரிகிறது. இந்த நிலையில் டி.சிவா தலைமையிலான அணியினர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இதில் தலைவர் பதவிக்கு டி.சிவாவும், துணை தலைவர் பதவிக்கு ஆர்.கே.சுரேஷ், ஜி.தனஞ்செயன்  ஆகியோரும், செயலாளர் பதவிக்கு ஜே.சதீஷ்குமாரும், பி.எல்.தேனப்பனும், பொருளாளர் பதவிக்கு கே.முரளிதரனும் போட்டியிடுகிறார்கள். இவர்கள் தவிர 21 பேர் செயற்குழு உறுப்பினர் பொறுப்புக்கு போட்டியிடுகிறார்கள்.

Related Stories: