கொரோனா பீதி எதிரொலி: வண்டலூர் உயிரியல் பூங்கா மூடல்

சென்னை: கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக வண்டலூர் உயிரியல் பூங்கா நேற்று மாலை முதல் மூடப்பட்டது.  கொரோனா பீதி காரணமாக சில நாட்களாக வண்டலூர் உயிரியல்பூங்காவுக்கு பார்வையாளர்களின் வருகை வெகுவாக குறைந்து வந்தது. இதனால், உயிரியல் பூங்கா வெறிச்சோடி காணப்பட்டது. இதை ெதாடர்ந்து, வண்டலூரில் உள்ள அண்ணா உயிரியல் பூங்காவை நேற்று மாலை முதல் வருகிற 31ம் தேதி வரை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து பூங்காவின் நுழைவாயிலின் கேட்டு பகுதியில் உள்ள மூன்று இடங்களில் அதற்கான அறிவிப்பு பேனர்களை பூங்கா நிர்வாகம் வைத்துள்ளது. பின்னர், நேற்று மாலை முதல் பூங்கா மூடப்பட்டது.  இதையொட்டி, பூங்காவில் உள்ள அனைத்து ஊழியர்களும் முக கவசம் மற்றும் கையுறை அணிந்தபடி பூங்கா முழுவதும் கிருமி நாசினிகள் தெளித்து வருகின்றனர். மேலும், நோய்த்தடுப்பு பணிகளையும் மேற்கொண்டுள்ளனர்.

Related Stories: