கொரோனா தடுப்பு நடவடிக்கை: அனைத்து காவல் நிலையங்களையும் சுத்தமாக வைக்க வேண்டும்...காவல் ஆணையர் உத்தரவு!

சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சென்னை காவல் நிலையங்களில் கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கை கழுவுதல், முக கவசம் அணிதல் உள்ளிட்ட பல்வேறு முறைகளை பின்பற்ற வேண்டும் என்று மருத்துவ குழுவினர் ஒவ்வொரு காவல்துறையினருக்கும் ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தார்கள். அது தொடர்பாக கடந்த 1 வாரங்களில் பல்வேறு இடங்களில் உள்ள காவல்துறையினருக்கு விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டது. அதுமட்டுமின்றி கடந்த 2 தினங்களாக தமிழக அரசு வருமுன் காப்போம் என்ற திட்டத்தின் மூலமாக பொதுமக்கள் அதிகம் கூடுகின்ற முக்கிய இடங்களில் இத்தகைய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மருத்துவ குழுவினர் விழிப்புணர்வு முகாம்களை அமைத்து வருகின்றனர். இதனை தொடர்ந்து, காவல் நிலையங்களில் புகார் கொடுக்க வருபவர்கள் கைகளை சுத்தமாக கழுவிய பின்னரே அனுமதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் சென்னையில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் கிருமி நாசினி கொண்டு சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் சிறிது நேரம் இடைவெளி விட்டு அவ்வப்போது காவல் நிலையம் சுத்தம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து, புகார் தாரர்கள் யாரேனும் வந்தால் அவர்கள் அமர்ந்திருந்த இருக்கைகள் சுத்தம் செய்யப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் சென்னை காவல் நிலையத்தில் காலை முதல் சுத்தம் செய்யப்பட்டு வருகின்றனர். இதையடுத்து, பெரும்பாலான காவல்நிலையங்களில் கிருமி நாசினிகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதேபோன்று பல்வேறு காவல்நிலையங்களும் அவ்வப்போது சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று அந்தெந்த எல்லைக்கு உட்பட்ட காவல் அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

Related Stories: