கொரோனா வைரஸ் பாதிப்பு: போராட்டத்தை ஒத்திவைக்க வேண்டும்: இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு வேண்டுகோள்

சென்னை: கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படுவதை தடுக்கும் வகையில் சாஹின் பாக் வழி தொடர் போராட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என்று இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பின் தலைவர் காஜா மொய்தீன் பாகவி, ஒருங்கிணைப்பாளர்கள் முகமது மன்சூர் காஸிமி, பஷீர் அகமது ஆகியோர் நேற்று வெளியிட்ட அறிக்கை: உலக அளவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. நாட்டு மக்களின் உயிரையும் நலனையும் கருத்தில் கொண்டு அனைத்து சாஹின் பாக் வழி தொடர் இருப்பு போராட்டங்களை தற்காலிகமாக ஒத்திவைக்குமாறு பொதுமக்களை தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் கூட்டமைப்பு கேட்டு கொள்கிறது. இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

இன்றைய போராட்டம் ஒத்திவைப்பு:

தமிழக மக்கள் ஒற்றுமை மேடையின் செயற்பாட்டுக் குழுக் கூட்டம் மவ்லவி மன்சூர் காஷிபி தலைமையில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில்ம் தேதி(இன்று) சென்னை உள்ளிட்ட தமிழகத்தில் நடத்தவிருந்த 24 மணி நேர தொடர் இருப்பு போராட்டத்தை மேடை தற்காலிகமாக ஒத்திவைக்கிறது. கொரோனா நோய் பிரச்னை மட்டுப்படும்போது மீண்டும் போராட்டம் புது வீரியத்துடன் புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: