தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?...ஐகோர்ட் கிளை கேள்வி

மதுரை: நெல்லை தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்காமல் சுத்திகரிப்பு செய்வதால் எந்த பயனும் இல்லை எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்கவும், ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்திராவிடக்கோரியும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சுந்தரவேல் என்பவர் தொடர்ந்த வழக்கை மார்ச் 30-ம் தேதிக்கு உயர்நீதிமன்ற கிளை ஒத்திவைத்தது.

Related Stories: