கொரோனா எதிரொலி: பயணிகள் கேட்டால் மட்டுமே கம்பளி போர்வை வழங்கப்படும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: கொரோனா ைவரஸ் தாக்கம் காரணமாக ரயில்களில் பயணிகள் கேட்டால் மட்டுமே கம்பளி போர்வைகள் வழங்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக அனைத்து ரயில் நிலையங்களிலும் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். ரயில் பெட்டிகளுக்கு கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில் ஏசி பெட்டிகளில் பயணிகள் கேட்டால் மட்டுமே கம்பளி போர்வைகள் வழங்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது ெதாடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கை : ரயில்வே வாரிய அறிவுறுத்தல்படி தெற்கு ரயில்வே சார்பில் இயக்கப்படும் ரயில்களின் ஏசி பெட்டிகளில் கம்பளி போர்வை வழங்குவது நிறுத்தி வைக்கப்படுகிறது. மறு உத்தரவு வரும் வரை இது அமலில் இருக்கும். பயணிகள் கேட்டால் மட்டுமே கம்பளி போர்வை வழங்கப்படும். இது தொடர்பாக அனைத்து பயணிகளுக்கும் எஸ்எம்எஸ் மூலமாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: