சுற்றுலா நகரமான புதுச்சேரியை அச்சறுத்தும் கொரோனா: மறு அறிவிப்பு வரும் வரை மழலையர், தொடக்க பள்ளிகளுக்கு விடுமுறை...மாநில அரசு அறிவிப்பு

புதுச்சேரி: கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். சீனாவில் தொடங்கிய கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மிகத்  தீவிரமாக பரவிக் கொண்டிருக்கிறது. பெரும்பாலான நாடுகள் தங்கள் எல்லைகளை மூடிவிட்டன. வெளிநாட்டினருக்கு பயண தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலும் இதன் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இந்நிலையில் தமிழகத்திலும்  2 பேருக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

முதல்வர் பிறப்பித்த உத்தரவில் முக்கியமாக தமிழகம் முழுவதும் எல்கேஜி முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளுக்கு மார்ச் 31-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அண்டை மாநிலங்களின் எல்லையோர வட்டங்களிலுள்ள  திரையரங்குகளை மார்ச் 31 வரை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தேனி, குமரி உள்ளிட்ட 16 மாவட்டங்களில் திரையரங்குகள், வணிக வளாகங்களை 31-ம் தேதி வரை மூட  உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அடுத்த 15 நாட்களுக்கு பொது  இடங்களில் மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும். தேவையின்றி வெளி மாநிலத்துக்கு செல்வதை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தை தொடர்ந்து, புதுச்சேரியிலும், கொரோனா அச்சறுத்தல் உள்ளது. புதுச்சேரியில் மூன்று பேர் கொரோனா வைரஸ் அறிகுறியுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும்  அவர்களது ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு புனேவில் உள்ள மத்திய அரசின் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக வெளிமாநில மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் புதுச்சேரிக்கு  வருவதை தவிர்த்துள்ளனர். இதனால் ஓட்டல்களில் அறைகள் பல காலியாக உள்ளன. புதுச்சேரி கடற்கரை, படகு இல்லம், ஆரோவில், ஊசுடு ஏரி பறவைகள் சரணாலயம், பாரதி பூங்கா, தாவரவியல் பூங்கா, மணக்குள விநாயகர் கோவில்  உள்ளிட்ட ஏராளமான சுற்றுலாத் தளங்கள் மக்கள் கூட்டம் இல்லாமல் காணப்படுகிறது.

இந்நிலையில், நாளை முதல் 5-ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை மழலையர், தொடக்க பள்ளிகளுக்கு நாளை முதல் விடுமுறை என புதுச்சேரி பள்ளிகல்வித்துறை  அமைச்சர் கமலக்கண்ணன் அறிவித்துள்ளார்.

Related Stories: