தடுப்பு காவலில் இருந்து காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா விடுவிப்பு: திமுக தலைவர் ஸ்டாலின் வரவேற்பு

சென்னை: காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா தடுப்பு காவலில் இருந்து விடுதலை செய்யப்பட்டதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, தடுப்புக் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்க நடவடிக்கை.

சோதனையை எதிர்த்து அப்துல்லா பெற்றுள்ள வெற்றியானது, ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான நம்முடைய நம்பிக்கையை நிலைநிறுத்தியிருக்கிறது. தடுப்புக் காவலில் உள்ள முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா மற்றும் மெகபூபா முப்தி உள்ளிட்ட தலைவர்களையும் உடனடியாக விடுவிக்க மத்திய அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: