தமிழகம் முழுவதும் மாவட்ட நீதிபதிகளாக 11 பேருக்கு பதவி உயர்வு

சென்னை: தமிழகம் முழுவதும் 11 பேருக்கு மாவட்ட நீதிபதிகளாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.அரியலூர் முதன்மை சார்பு நீதிபதியாக இருந்த சரவணன், சேலம் மகளிர் நீதிமன்ற நீதிபதியாகவும், கோயம்புத்தூர் முதன்மை மாஜிஸ்திரேட்டாக  இருந்த ஏ.எஸ்.ரவி கோயம்புத்தூர் டி.என்.பி.ஐ.டி சிறப்பு நீதிமன்ற நீதிபதியாகவும், வேலூர் முதன்மை மாஜிஸ்திரேட்டாக இருந்த பாலசுப்பிரமணியன்,  வேலூர் மகளிர் நீதிமன்ற நீதிபதியாகவும், சென்னை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைகுழு செயலாளராக இருந்த ஐ.ஜெயந்தி தஞ்சாவூர் லோக் அதாலத்  தலைவராகவும், திருவண்ணாமலை முதன்மை மாஜிஸ்திரேட் சங்கர், திருவண்ணாமலை மகளிர் நீதிமன்ற நீதிபதியாகவும், சென்னை எழும்பூர்  முதன்மை மாஜிஸ்திரேட்டாக இருந்த ரவி, தஞ்சாவூர் 2வது கூடுதல் மாவட்ட நீதிபதியாகவும், ராமநாதபுரம் முதன்மை மாஜிஸ்திரேட் சுபத்ரா  ராமநாதபுரம் மகளிர் நீதிமன்ற நீதிபதியாகவும் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

இதேபோல், கிருஷ்ணகிரி முதன்மை மாஜிஸ்திரேட் ரவி, சென்னை 4வது சிட்டி சிவில் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாகவும், சென்னை சிட்டி சிவில்  நீதிமன்ற உதவி நீதிபதியாக இருந்த காஞ்சனா, வில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்ற நீதிபதியாகவும், விழுப்புரம் முதன்மை மாஜிஸ்திரேட் சுஜாதா,  அரியலூர் லோக் அதாலத் தலைவராகவும். சென்னை, 2வது சிட்டி சிவில் நீதிமன்றத்தில் உதவி நீதிபதியாக இருந்த கணபதி சாமி, சென்னை 10வது  சிட்டி சிவில் நீதிமன்ற மாவட்ட நீதிபதியாகவும் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

Related Stories: