அரியர் தேர்வுகள் எழுத அண்ணா பல்கலை. அனுமதி

சென்னை:அண்ணா பல்கலைக் கழக பதிவாளர் வெளியிட்டுள்ள அறிக்கை: அண்ணா பல்கலை மூலம் நடத்தப்படும் இளநிலை பொறியியல், முதுநிலை பொறியியல் பட்டங்கள் படிக்கும் மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும்  நடக்கும் தேர்வில் அரியர்ஸ் வைக்காமல் தேர்ச்சி பெற வேண்டும் என்பது விதி. அப்படி அரியர்ஸ் வைக்கும் மாணவர்கள்  குறிப்பிட்ட கால  அவகாசத்துக்குள் அந்த நிலுவைத் தேர்வுகளை எழுதி முடிக்க வேண்டும். இந்நிலையில், கடந்த மே மாதம் நடந்த 252வது அண்ணா பல்கலைக் கழக  ஆட்சி மன்றக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் படி, அரியர்ஸ் வைத்துள்ள மாணவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட கால அவகாசத்தையும்  தாண்டி மீண்டும் அந்த தேர்வுகளை சிறப்பு வாய்ப்பாக எடுத்து எழுதலாம் என்று அனுமதி அளித்துள்ளது. வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடக்கும்  தேர்வில் மாணவர்கள் இந்த வ ாய்ப்பை பயன்படுத்தி தேர்வு எழுதலாம்.

இதன்படி சென்னை அண்ணா பல்கலைக் கழக துறைகளில் கடந்த 2000ம் ஆண்டில் சேர்ந்த இளநிலை, முதுநிலை, முழுநேர மற்றும் பகுதி நேர படிப்பு  மாணவர்களும், அண்ணா பல்கலைக் கழகத்தில் இணைப்பு பெற்ற கல்லூரிகளில் 2001-2002ம் ஆண்டில் படித்த(3வது செமஸ்டர்) தமிழ்நாடு மாநில  பல்கலைக் கழகத்தில் இருந்து மாறியவர்கள் மற்றும் 2002-2003ம் ஆண்டு(முதல் மெஸ்டர்) மற்றும் தற்போது தன்னாட்சி பெற்றுள்ள கல்லூரிகள்  உள்ளிட்ட தொலைதூர வழி கல்வியில் அண்ணா பல்கலையில் படித்தவர்கள் மேற்கண்ட வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். இது தொடர்பான கூடுதல் விவரங்கள் வேண்டுவோர் அண்ணா பல்கலைக் கழக இணைய தளமான //coe1.annauniv.eduல் தெரிந்து  கொள்ளலாம். 23ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அண்ணா பல்கலைக் கழக மாணவர்களுக்காக தனியாக வேறு தேதி அறிவிக்கப்படும்.

Related Stories: