வளரிளம் பருவத்தினர், பெண்கள் நலனுக்கு சன் பவுண்டேஷன் 2 கோடி நிதி உதவி

பொருளாதாரச் சூழ்நிலையால் கல்வியைத் தொடர முடியாத குழந்தைகள் மற்றும் பெண்களின் மேம்பாட்டுக்காக சன் பவுண்டேஷன் ரூ.2 கோடி நிதி உதவி அளித்துள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் நினைவாக, ஏழை எளியோரின் கல்வி, மருத்துவச் சிகிச்சை உள்ளிட்ட நலத் திட்டங்களுக்காக சன் பவுண்டேஷன் பல்வேறு அமைப்புகளுக்கு நிதி உதவி வழங்கி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கோவை, சேலம், திருவண்ணாமலை, தேனி, கிருஷ்ணகிரி, பெரம்பலூர், விருதுநகர் மாவட்டங்களில் பொருளாதாரம் மற்றும் குடும்பச் சூழ்நிலையால் கல்வியைத் தொடர முடியாத வளரிளம் பருவத்தினர் மற்றும் பெண்களின் மேம்பாட்டுக்கு சன் பவுண்டேஷன் ரூ.2 கோடி நிதி உதவி அளித்துள்ளது.

இதற்கான காசோலையை, யுனிசெப் அமைப்பின் சமூகக் கொள்கை நிபுணர் குமரேசன் மற்றும் மதுமிதா சென் ஆகியோரிடம் சன் பவுண்டேஷன் சார்பில் காவேரி கலாநிதி மாறன் வழங்கினார். ஏழை எளியோருக்கு கல்வி, தரமான இலவச சிகிச்சை, அடிப்படைக் கட்டமைப்பு மேம்பாடு, மகளிர் மற்றும் இளைஞர் நலன், கிராமப்புற மேம்பாடு உள்ளிட்ட நலத் திட்டங்களுக்காக சன் பவுண்டேஷன் மற்றும் சன் டி.வி. இணைந்து இதுவரை 110 கோடி ரூபாய்க்கும் அதிகமாக நிதி உதவி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: