கலெக்டர் அலுவலகத்தில் நிலவேம்பு கஷாயம் திடீர் விநியோகம்

நாகர்கோவில்: உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காய்ச்சல் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. குமரி மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுசுகாதாரம் மற்றும் மருத்துவ துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். தற்போது டெங்கு, சிக்குன் குன்யா போன்ற பாதிப்புகள் இல்லை.

இந்தநிலையில் திடீரென்று குமரி மாவட்ட இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை சார்பில் சிக்குன் குன்யா, டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்பு கசாயம் இலவசமாக வழங்கும் நிகழ்ச்சி நாகர்கோவிலில் குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதில் ஏராளமான ஊழியர்கள் கலந்துகொண்டு நிலவேம்பு கஷாயம் அருந்தினர்.

Related Stories: