அற்புதத்தை நிகழ்த்த மக்கள் தயாராக இருக்கின்றனர்: மக்கள் மன்ற நிர்வாகிகள் முன்னிலையில் ரஜினிகாந்த் பேச்சு

சென்னை: 1996-இல் எதிர்பாராத விதமாக அரசியலில் என் பெயர் இழுக்கப்பட்டது. சிஸ்டம் சரிசெய்யாமல் ஆட்சி மாற்றம் நடந்தால் நன்றாக இருக்காது என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். நட்சத்திர ஓட்டலில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கட்சித் தலைவனாக இருந்து நல்ல மனிதரை முதலமைச்சராக உட்காரவைப்பேன். இளைஞர்கள் ஆட்சி அதிகாரத்துக்கு வருவதற்கு நான் பாலமாக இருப்பேன். அன்பு, பாசம், தன்மானம் கொண்ட ஒருவரை நாம் முதலமைச்சராக்குவோம், என கூறியுள்ளார். மேலும் பேசிய அவர், படித்தவர்கள், 50 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிப்பேன். கட்சிப்பதவியை சிலர் தொழிலாக வைத்துள்ளனர். ஓய்வுபெற்ற ஐஏஎஸ், டாக்டர்கள், நீதிபதிகள், போன்றவர்களை அரசியலுக்கு அழைப்பேன். தேவையானவர்களை மட்டும் வைத்துக்கொள்ள திட்டமிட்டுள்ளேன். முதலமைச்சர் பதவி வேண்டாம் என்பதில் நான் முன்பிருந்தே உறுதியாக இருந்தேன். மன்றப் பொறுப்பாளர்களுக்கு முன்னுதாரணமாக நானே பதவி வேண்டாம் என்று சொல்கிறேன். முதலமைச்சர் பதவி வேண்டாம் என நான் கூறுவது தியாகம் அல்ல என கூறியுள்ளார். அதுமட்டுமல்லாது, அசுர பலத்துடன் இருக்கும் இரு ஜாம்பவான்களை நாம் எதிர்க்கப் போகிறோம் என கூறிய அவர், அற்புதத்தை நிகழ்த்த மக்கள் தயாராக இருக்கின்றனர் என கூறியுள்ளார்.

Related Stories: