சென்னை விமான நிலைய உள்நாட்டு முனையத்திற்கு காமராஜரின் பெயரை வைக்க வேண்டும்: டிடிவி தினகரன் கோரிக்கை

சென்னை: சென்னை விமான நிலைய உள்நாட்டு முனையத்திற்கு காமராஜரின் பெயரை வைக்க வேண்டும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ள உள்நாட்டு முனையத்திற்கு, ஏற்கனவே இருந்த பெருந்தலைவர் காமராஜரின் பெயரை மீண்டும் வைக்கவேண்டும் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். இதுகுறித்த அவருடைய ட்விட்டர் பதிவில், ‘ சென்னை விமான நிலையத்தில் மறு நிர்மாணம் செய்யப்பட்டுள்ள உள்நாட்டு முனையத்திற்கு, ஏற்கனவே இருந்த பெருந்தலைவர் காமராஜரின் பெயரை மீண்டும் வைப்பதில் காட்டப்படும் தயக்கம் வருத்தமளிக்கிறது.

இதுதொடர்பாக இந்திய விமான நிலையங்களின் ஆணையம் ஏற்கனவே அளித்த வாக்குறுதிப்படி உள்நாட்டு முனையத்தின் பெயர்ப் பலகையில் உடனடியாக கர்ம வீரர் காமராஜரின் பெயரை இடம் பெறச்செய்ய வேண்டும். பெருமைக்குரிய பொதுவாழ்க்கையின் அடையாளமாக வாழ்ந்து மறைந்த காமராஜருக்கு அது மேலும் பெருமை சேர்ப்பதாக அமையும். மேலும் உள்நாட்டு விமானங்களுக்குள் செய்யப்படும் அறிவிப்புகளிலும் காமராஜர் முனையம் என்கிற வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Related Stories: