நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்காளர் பட்டியலை தயாரிப்பதற்கான வழிமுறைகளை வெளியிட்டது மாநில தேர்தல் ஆணையம்

சென்னை : நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்காளர் பட்டியலை தயாரிப்பதற்கான வழிமுறைகளை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட இறுதி வாக்காளர் பட்டியல் அடிப்படையில் வாக்காளர் பட்டியலை தயாரிக்க மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. இந்த வாக்காளர் பட்டியல் அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் 20ம் தேதி  வெளியிட வேண்டும் என்றும்  மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி ஏப்ரல் மூன்றாவது வாரத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டு மே மாத இறுதிக்குள் தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: