சர்வதேச மகளிர் தினம் 4 விமானங்களை இயக்கிய பெண்கள்: பூங்கொத்து கொடுத்து வாழ்த்து

சென்னை: சர்வதேச மகளிர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையடுத்து ஏர் இண்டியா விமான நிறுவனம் ஆண்டுதோறும் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களே விமானங்களை இயக்கவைத்து உற்சாகப்படுத்தி வருகிறது. அதேபோல் ஏற்கனவே சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு பெண்களே இயக்கும் வகையில் ஒரு விமானத்தை ஏர்இண்டியா விமான நிறுவனம் இயக்கத் தொடங்கினர். அதுபடிப்படியாக அதிகரித்துக்கொண்டே வந்தது. இந்தமுறை நேற்று 4 விமானங்களை பெண்கள் இயக்க வைத்து பெண்களை உற்சாகப்படுத்தியது. அதில் மூன்று உள்நாட்டு விமானங்கள். ஒன்று சர்வதேச விமானம்.

இந்நிலையில் நேற்று காலை 6.10 சென்னையில் இருந்து டெல்லி சென்ற விமானத்தில் தலைமை விமானியாக ஆர்த்தி டி.குர்னி, விமானியாக பி.கே.பிரித்திகா மற்றும் விமான ஊழியர்களாக மீனாட்சிகுந்தர், அரோராரீனா, பீர்கீதா, ரஸ்மி, சுரனா, பிரியங்கா, ஹரிக்கன் ஆகியோர் இயக்கினர். சென்னை விமான நிலையத்தில் அவர்களை ஏர் இண்டியா தென்வட்டார இயக்குனர் ஹெமலதா மலர்கொத்து கொடுத்து வழியனுப்பினர். இந்த விமானத்தில் 123 பயணிகள் பயணம் செய்தனர். அதில் ஆண்கள் 84, பெண்கள் 35, சிறுவர்கள் 3, குழந்தை 2 ஆகியோர் பயணம் செய்தனர்.

இந்நிலையில், பகல் 2.05 மணிக்கு சென்னையிலிருந்து கோவை செல்லும் ஏர் இண்டியா விமானத்தையும் பெண்களே இயக்கினர். இந்த விமானத்தில் தலைமை விமானியாக சோனியாரணி ஜெயின், விமானியாக விரிண்தாநாயர், ஊழியர்களாக கரீஷ்மா, சரிதா ஜீனா, மாயா, சீட்நாஜெ ஆகியோர் இயக்குகினர். அந்த விமானத்தில் 143 பேர் பயணம் செய்தனர்.  மூன்றாவது விமானம் கோவையில் இருந்து சென்னை வந்தது. அதில் கோவை சென்ற விமானத்தை பெண்களே இயக்கினர். இந்த விமானம் மீண்டும் மாலை 3.45 மணிக்கு புறப்பட்டு கோவையிலிருந்து 4.55க்கு சென்னை வரும் ஏர் இண்டியா விமானத்தையும் இவர்களே இயக்கினர். இதில் 170 பயணிகள் வந்தனர். இதேபோல், சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இரவு 7.05 மணிக்கு துபாய் செல்லும் ஏர் இண்டியா விமானத்தை பெண்களே இயக்கினர்.

இந்த விமானத்தை தலைமை விமானி சோனியாரணி ஜெயின், விமானியாக விரிண்தாநாயர், விமான ஊழியர்கள் பிபோலி, சிநேகா பகாதி, சுவாதி முச்சாடியா, பீபிபர் பிரசன்னா, நாகமணி ஆகியோர் இயக்கினர்.  இதில் 123 பேர் பயணம் செய்தனர். இதில் பயணம்செய்த பெண் பயணிகளுக்கு ரோஜா மலர் கொத்து கொடுத்து சென்னை விமான நிலையத்தில் முதல் முறையாக 4 விமானங்களை இயக்கி சாதனை படைத்துள்ளனர்.

Related Stories: