பூண்டி ஏரியில் 1,415 மில்லியன் கனஅடி நீர் இருப்பு

சென்னை: சென்னை மக்களின் தாகத்தை தீர்ப்பதில் பூண்டி ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த ஏரிக்கு கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்கீழ், ஆந்திர அரசு கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்தது.  இதனால் ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. நேற்று மாலை 6 மணி நிலவரப்படி, வினாடிக்கு 162 கன அடி நீர் கிருஷ்ணா கால்வாய் வழியாக ஏரிக்கு வந்துகொண்டு இருக்கிறது. பூண்டி ஏரியின் மொத்த உயரம் 35 அடி. இதில், 28.50 அடி தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரியின் முழு கொள்ளளவு 3,231 மில்லியன் கன அடி. இதில், 1,415 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது.

ஏரியில் இருந்து சென்னை மக்களின் குடிநீருக்கென பேபி கால்வாய் வழியாக 10 கன அடியும், லிங்க் கால்வாய் வழியாக வினாடிக்கு 453 கன அடி என வினாடிக்கு 463 கன அடி நீர் புழல் நீரேற்று நிலையத்துக்கு அனுப்பப்பட்டு வருகிறது என்று  அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: