மகாராஷ்டிரா காவல்துறையின் சிஐடி போலீஸ் இணையதளம் முடக்கம்: பிரதமர் மோடி, போலீசுக்கு எச்சரிக்கை

மும்பை: மகாராஷ்டிரா காவல்துறையின் சிஐடியின் வலைத்தளம் திடீரென முடக்கப்பட்டது. அதில், பிரதமர் மோடி மற்றும் இந்திய காவல்துறைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா காவல்துறையின் சிஐடி-யின் வலைத்தளம் நேற்று திடீரென முடக்கப்பட்டது. அந்த இணையத்தின் முகப்பு பக்கத்தில், குதிரை சவாரி மற்றும் கொடியை வைத்திருக்கும் ஒரு மனிதனின் படத்திற்கு எதிராக ‘இமாம் மஹ்தி அரசு’ என்ற சொற்களை எழுத்துருவில் காட்டப்பட்டுள்ளது. காவல்துறையின் இணைய பக்கமும் ஹேக் செய்யப்பட்டது.

கீழேயுள்ள செய்தியில், சமீபத்தில் டெல்லியில் நடந்த கலவரங்களைக் குறிப்பிட்டு, ‘பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் முஸ்லிம்கள்; நாங்கள் இந்திய காவல்துறை மற்றும் மோடி அரசாங்கத்தை எச்சரிக்கிறோம்; முஸ்லிம் மக்களை காயப்படுத்துவதை நிறுத்துங்கள். இமாம் மஹ்தி விரைவில் வருகிறார்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, மகாராஷ்டிர மாநில கூடுதல் போலீஸ் இயக்குநர் ஜெனரல் குல்கர்னி கூறுகையில், ‘எங்களது இணையதளத்தின் தரவு பாதுகாப்பானது.

இது ஒரு ஹேக்கிங் அல்ல; ஆனால் அதன் பாதுகாப்பு அம்சங்களை சரிபார்க்க புதுப்பிக்கப்பட்ட வலைத்தளத்தில், சிலர் இதுபோன்ற செய்திகளை வெளியிட்டுள்ளனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது’ என கூறினார்.

Related Stories: