டாப்சிலிப்பில் வெயிலின் தாக்கத்தை தணிக்க நீரோடையில் குளித்து மகிழும் வளர்ப்பு யானைகள்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகேயுள்ள டாப்சிலிப் கோழிகமுத்தி முகாமில் உள்ள வளர்ப்பு யானைகள் வெயிலின் தாக்கத்தை தணிக்க ஓடையில் குளித்து மகிழ்ந்து வருகின்றன.  ஆனைமலை புலிகள் காப்பகம் சார்பில், பாப்சிலிபில் உள்ள கோழிகமுத்தியில், வளர்ப்பு யானைகள் முகாம் செயல்பட்டு வருகிறது.  இந்த முகாமில் சின்னதம்பி, அரிசி ராஜா உட்பட 27 வளர்ப்பு யானைகள் வனத்துறை சார்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது. விளை நிலங்களை சேதபடுத்தி, மக்களை உயிர் பலி வாங்கும் காட்டு யானை விரட்டவும், பிடிக்கவும்  டாப்சிலிப்பில் வளர்க்கப்பட்டு வரும் கலீம், மாரியப்பன் போன்ற கும்கி யானைகள் பயன்படுத்தபட்டு வருகிறது.

ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பில் கோயில் யானைகளுக்கு சிறப்பு புத்துணர்வு முகாம் நடத்தப்படுவது போல் வனத்துறை சார்பில் வளர்க்கப்படும் யானைகளும் சிறப்பு புத்துணர்வு முகாம் நடத்தபடுகிறது. இந்தாண்டுக்கான வளர்ப்பு யானைகளுக்கான சிறப்பு புத்துணர்வு முகாம் டாப்சிலிப் பகுதியில் கோழிகமுத்தி முகாமில் கடந்த பிப்ரவரி 6ம் தேதி தொடங்கியது. இந்த சிறப்பு புத்துணர்வு முகாம் மார்ச் 24ம் தேதி வரை 48 நாட்களுக்கு நடைபெறுகிறது. 48 நாட்களுக்கு வளர்ப்பு யானைகளுக்கு ஓய்வு அளித்து சத்து மாத்திரை, மருத்துகள் கலந்த உணவு மூன்று வேளையும் வழங்கபடுகிறது. மேலும் கால்நடை மருத்துவர்களை கொண்டு யானை சிறப்பு உடற்தகுதி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.   

இந்நிலையில், வனப்பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் முகாமிலுள்ள வளர்ப்பு யானைகள், கோழிகமுத்தியில் உள்ள ஓடையில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்து வருகின்றன. சுற்றுலா வாகனங்கள் மூலம் கோழிகமுத்தி யானைகள் முகாமுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் பலரும் யானைகள் தண்ணீரில்  குளித்து விளையாடி வரும் யானைகளை கண்டு மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.

Related Stories: