விடுமுறையில் 3 துணை ஆணையர்கள் மாநகராட்சி பட்ஜெட் தயாரிப்பு பணி சுணக்கம் : வருவாய் துணை ஆணையர் பதவி 2 மாதமாக காலி

சென்னை: சென்னை மாநகராட்சியில் 3 துணை ஆணையர்கள் விடுமுறையில் சென்றுள்ளதால் பட்ஜெட் தயாரிப்பு பணி சுணக்கமாக நடைபெற்றுவருதாக ஊழியர்கள் தெரிவித்தனர். சென்னை மாநகராட்சியில் மொத்தம் 15 மண்டலங்களும், 200 வார்டுகளும் உள்ளன. இவற்றை நிர்வாகிக்க ஆணையர் தலைமையில் ஐஏஎஸ் அதிகாரிகள் பதவியில் ஒரு இணை ஆணையர் மற்றும் 3 துணை ஆணையர்கள் உள்ளனர். இதை தவிர்த்து 15 மண்டலங்கள் 3 வட்டராமாக பிரிக்கப்பட்டு 3 வட்டார துணை ஆணையர் பதவியில் பணியாற்றி வருகின்றனர்.  இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் மாநகராட்சி பட்ஜெட் மார்ச் 31ம் தேதிக்குள் தாக்கல் செய்யப்பட வேண்டும். இதற்கான பணிகள் டிசம்பர் முதலே தொடங்கும். இந்நிலையில் தற்போது சென்னை மாநகராட்சியில் 3 துணை ஆணையர்கள் விடுப்பில் சென்றுள்ளதால் பட்ஜெட் தயாரிப்பில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஊழியர்கள் தெரிவித்தனர்.

சுகாதார துணை ஆணையர் பணி தொடர்பான பயிற்சிக்கு சென்றுள்ளதால் அவரது பொறுப்பை தெற்கு வட்டார துணை ஆணையர் கவனித்து வருகிறார். கல்வித்துறை துணை ஆணையர் சொந்த வேலை காரணமாக விடுப்பில் சென்றுள்ளதால் மத்திய வட்டார துணை ஆணையர் அந்த பொறுப்பு கவனித்து வருகிறார். குறிப்பாக பட்ஜெட் தயாரிப்பில் முக்கிய பங்கு விகிக்கும் நிதி மற்றும் வருவாய் பிரிவு இணை ஆணையர் 9 மாத காலம் மகப்பேறு விடுப்பில் சென்றுவிட்டதால் அவரது பொறுப்பை பணிகள் துறை துணை ஆணையர் கூடுதலாக கவனித்துவருகிறார்.

இவ்வாறு கோப்புகளுக்கு அனுமதி அளிக்கும் அதிகாரிகள் 3 பேர் விடுப்பில் சென்றுவிட்டால் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஊழியகர்கள் தெரிவித்துள்ளனர். எனவே 2 மாதமாக காலியாக உள்ள வருவாய் துறை இணை ஆணையர் பதவிக்கு உடனடியாக நிரந்தர அதிகாரியை நியமிக்க வேண்டும் என்றும் ஊழியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: