தமிழகத்தில் கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தம்..: வேலை நிறுத்தத்தால் குடிநீர் கேன் கடும் தட்டுப்பாடு

சென்னை: கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தம் போராட்டம் காரணமாக முக்கிய நகரங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் கடந்த வியாழன் கிழமை முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டுவருகின்றனர். போராட்டம் 5-வது நாளை எட்டியுள்ள நிலையில் சென்னை, கோவை போன்ற முக்கிய நகரங்களில் குடிநீர் கேன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் போன்ற சென்னையின் புறநகரங்களில் குடிநீர் தட்டுப்பாட்டை பயன்படுத்தி சிலர் ரூ.25-க்கு விற்க வேண்டிய குடிநீர் கேனை ரூ.60-க்கு வரை விற்பனை செய்து வருகின்றனர். வேலை நிறுத்த போராட்டம் தொடர்ந்தால் குடிநீர் கேன் விலை மேலும் அதிகரிக்கப்படும் என்று கூறப்படுகிறது. எனவே தமிழக அரசு தலையிட்டு இந்த பிரச்னையை தீர்க்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே குடிநீர் கேன் உற்பத்தியாளர்களிடம் தமிழக அரசு இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: