சுள் வெயிலுக்கு... ஜில் குளியல் கும்பக்கரையில் குவியுது கூட்டம்

பெரியகுளம்: கும்பக்கரை அருவியில் நீர்வரத்து சீராக இருப்பதால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் முற்றுகையிட்டு, வெயிலின் தாக்கத்தை குறைக்க குளித்து மகிழ்கின்றனர். தேனி மாவட்டம், பெரியகுளத்திலிருந்து 8 கிமீ தொலைவில், கொடைக்கானல் மலையடிவாரத்தில் இயற்கைச் சூழலில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது.  மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் கொடைக்கானல் பகுதியில் மழை பெய்தால் அருவிக்கு நீர்வரத்து இருக்கும். இயற்கையான சூழலில் அமைந்துள்ள இந்த அருவியில் குளித்து மகிழ, தமிழகம் மட்டுமல்லாமல், வெளிமாநிலங்களிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.

தற்போது கும்பக்கரை அருவியில் நீர்வரத்து சீராக இருப்பதால், சுற்றுலாப் பயணிகள் குளிக்க, வனத்துறை அனுமதி அளித்துள்ளனர். இதனால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுற்றுலாப்பயணிகள் அருவிக்கு வந்து குளித்து மகிழ்கின்றனர். தொடர்ந்து மழை இல்லாமல் அருவியில் நீர்வரத்து குறைந்தால், சில தினங்களில் குளிப்பதற்கு தடை விதிக்கப்படலாம் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Related Stories: