மண்டலாபிஷேகம் நிறைவு விழா தஞ்சை பெரியகோயிலில் 1 லட்சம் பக்தர்கள் தரிசனம்

தஞ்சை: உலக புகழ்பெற்ற தஞ்சை பெரியகோயிலில் 23 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த மாதம் 5ம் தேதி குடமுழுக்கு விழா வெகுசிறப்பாக நடைபெற்றது. தொடர்ந்து 6ம் தேதி முதல் மண்டலாபிஷேகம் நடந்து வந்தது. தினமும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். 24ம் நாளான ேநற்று மண்டலாபிஷேகம் நிறைவு பெற்றது. காலை  8.30 மணிக்கு மேல் 9 மணிக்குள் பெருவுடையாருக்கு பால் அபிஷேகம்.

புனிதநீர் அபிஷேகம்  செய்யப்பட்டது. தொடர்ந்து சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனையுடன் மண்டலாபிஷேக பூஜைகள் நிறைவு பெற்றது. மண்டலாபிஷேக நிறைவையொட்டியும் நேற்று ஞாயிறு விடுமுறை என்பதாலும் சுமார் 1 லட்சம் பக்தர்கள் காத்திருந்து பெருவுடையாரை தரிசனம் செய்தனர்.

Related Stories: