சிவசேனாவின் ‘சாம்னா’ ஆசிரியராக ரேஷ்மி தாக்கரே பொறுப்பேற்றார்

மும்பை: சிவசேனா நாளேடான ‘சாம்னாவின்ஆசிரியராக முதல்வர் உத்தவ் தாக்கரேயின் மனைவி ரேஷ்மி பொறுப்பேற்றிருக்கிறார். மறைந்த சிவசேனா தலைவர் பால்தாக்கரே கடந்த 1983 ஜனவரி 23ம் தேதி சாம்னா பத்திரிகையை தொடங்கினார். அதன் ஆசிரியராகவும் இருந்தார். பால்தாக்கரேயின் மறைவுக்கு பிறகு அவருடைய மகனும் தற்போதைய மகாராஷ்டிரா முதல்வருமான உத்தவ் தாக்கரே அதன் ஆசிரியராக பொறுப்பு ஏற்றார்.

மகாராஷ்டிராவில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலை தொடர்ந்து உத்தவ் தாக்கரே நவம்பர் 28ம் தேதி மாநில முதல்வராக பொறுப்பு ஏற்றார். அதைத் தொடர்ந்து சாம்னா ஆசிரியர் பொறுப்பில் இருந்தும் விலகினார். இந்த நிலையில், ரேஷ்மி தாக்கரே சாம்னா பத்திரிகையின் ஆசிரியர் பொறுப்பை ஏற்று இருப்பதாக நேற்று அறிவிக்கப்பட்டது. சிவசேனா மாநிலங்களை உறுப்பினர் சஞ்சய் ராவுத் தொடர்ந்து இந்த பத்திரிகையின் நிர்வாக ஆசிரியர் பொறுப்பில் இருப்பார்.

Related Stories: