குளச்சல்: குமரியில் பிரசித்திபெற்ற கோயில்களில் மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலும் ஒன்று. கேரள பெண் பக்தர்கள் இருமுடி கட்டி வந்து அம்மனை வழிபடுவதால் இந்த கோயில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது. இங்கு ஆண்டுதோறும் மாசிக்கொடைவிழா பல்வேறு நிகழ்ச்சிகளுடன் 10 நாட்கள் வெகுவிமரிசையாக நடப்பது வழக்கம். அதன்படி இந்த வருடத்துக்கான மாசிக்கொடை விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை தொடங்கியது. இதனை முன்னிட்டு காலை 4.30 மணிக்கு திருநடை திறக்கப்பட்டது. 5 மணிக்கு கணபதி ஹோமம், 6 மணிக்கு பஞ்சாபிஷேகம், 6.30 மணிக்கு உஷ பூஜை, சிறப்பு செண்டை மேளம் ஆகியவை நடந்தன. 7.50 மணியளவில் திருக்கொடியேற்றம் நடந்தது.
இதில் தெலங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டனர்.மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் மாசிக்கொடை விழா இன்று தொடங்கியது: கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்பு
- மாண்டைக்காடு பகவதியம்மன் கோயில் மாசிக்கோடை விழா
- தமிழ்நாடு சவுந்தரராஜன்
- மண்டைக்காடு பாகவத்யமன் கோயில் மாசிக்கோடு