பனாமா நாட்டு கப்பலில் இருந்து 76 ஆயிரம் டன் சுண்ணாம்பு கல் இறக்குமதி: சென்னை துறைமுகம் சாதனை

சென்னை : பனாமா நாட்டு கப்பலில் இருந்து 76 ஆயிரம் டன் சுண்ணாம்பு கல்லை இறக்குமதி செய்து  சென்னை துறைமுகம் சாதனை படைத்துள்ளது.  சென்னை துறைமுகத்துக்கு கடந்த 28 ம் தேதி பனாமா நாட்டைச் சேர்ந்த எம்.பி.ஸ்கார்லெட் ஆஸ்பெட்ரோஸ் கப்பல் மூலம் 76 ஆயிரம் டன் சுண்ணாம்பு கல் வந்தது. இந்த சுண்ணாம்பு ஜவஹர் 2 இறக்குமதி தளம் இறக்குமதி செய்யப்பட்டது. இதன் மூலம் அதிக அளவிலான சுண்ணாம்பு கல்லை இறக்குமதி செய்து சென்னை துறைமுகம் சாதனை படைத்துள்ளது. ஜவஹர் 2 தளம் சமீபத்தில் 14 மீட்டர் அளவுக்கு ஆழப்படுத்தப்பட்டது. இதனால் அதிக அளவு திறன் கொண்ட கப்பலில் இருந்து சரக்குகளை கையாளும் திறனை இந்த தளம் பெற்றது.  இந்த பணியை சிறப்பாக மேற்கொண்ட ஜேஎஸ்டபிள்யூ இறக்குமதி நிறுவனம் மற்றும் சென்னை துறைமுக அதிகாரிகளுக்கு துறைமுக ரவீந்திரன் பாராட்டுகளை தெரிவித்துள்ளார். மேலும் வருங்காலத்தில் இந்த எணிக்கை அதிகரிக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: