ராமநாதபுரம், விருதுநகரில் புதிய அரசு மருத்துவ கல்லூரிக்கு முதல்வர் அடிக்கல் நாட்டுகிறார்

சென்னை: ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய இரண்டு மாவட்டங்களில் புதிய அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு நாளை முதல்வர் எடப்பாடி அடிக்கல் நாட்டுகிறார். ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து, ராமநாதபுரம் ஒருங்கிணைந்த மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நாளை காலை 10 மணிக்கும், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நாளை மாலை 3 மணிக்கும் புதிய அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டுகிறார்.

இந்த இரண்டு விழாவுக்கும் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் புவி அறிவியல் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தலைமை வகிக்கிறார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை  வகிக்கிறார். இந்த விழாக்களில் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் விஜயபாஸ்கர், பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மற்றும் அமைச்சர்கள், தலைமை செயலாளர் சண்முகம் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கிறார்கள்.

Related Stories: