அண்ணா பல்கலைக்கழக 16வது பட்டமளிப்பு விழா

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் 16வது பட்டமளிப்பு விழா சென்னையில் நேற்று நடந்தது. இதில் 4075 பேர் பட்டம் பெற்றனர். அண்ணா பல்கலைக்கழகத்தின் 16வது பட்டமளிப்பு விழா சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் நடந்தது. அண்ணா பல்கலைக் கழகத்தின் உறுப்பு கல்லூரிகளான கிண்டி பொறியியல் கல்லூரி, எம்ஐடி, அழகப்பா தொழில்நுட்ப கல்லூரி ஆகியவற்றில் படித்த இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகளில் தேர்ச்சி பெற்ற 4075 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.

அண்ணா பல்கலை துணை வேந்தர் சூரப்பா விழாவுக்கு தலைமை வகித்து, பட்டங்களை வழங்கினார். மத்திய அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மையத்தின் செயலாளர் மற்றும் தலைமை இயக்குநரான டாக்டர் சேகர் சி.மாண்டே சிறப்பு விருந்தினராக பங்கேற்று விழா சிறப்புரையாற்றினார்.

விழாவில் இளநிலை பட்டம் 2276, முதுநிலை பட்டம் 1566, இளநிலை பகுதி நேர படிப்பு 66, முதுநிலை பகுதி நேர படிப்பு 167 பேர் என மொத்தம் 4075 பேர் பட்டம் பெற்றனர். இவர்களில் இளநிலை பட்டம் பெற்றோரில் மாணவர்கள் 1324, மாணவியர் 1018 பேர், முதுநிலை படிப்புகளில் பட்டம் ெபற்றவர்களில் மாணவர்கள் 812, மாணவியர் 921 பேர்.

Related Stories: