நெடுஞ்சாலைத்துறையில் ஒரே சாலைகளில் மாறி,மாறி பராமரிப்பு மேற்கொள்ளாமல் பில் போட்டு பணம் சுருட்டும் அதிகாரிகளுக்கு செக்: கலெக்டர்களின் ஒப்புதல் பெற்ற பிறகு நிதி: தமிழக அரசு உத்தரவு

சென்னை: நெடுஞ்சாலைத்துறையில் ஒரே சாலை பராமரிப்பில் மோசடியை தடுக்க கலெக்டர் அனுமதி அளித்தால் தான் கான்டிராக்டர்களுக்கு பணத்தை தர வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் தமிழக நெடுஞ்சாலை துறைக்கு அரசு அனுப்பி உள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியுதவியில் திட்டம் சாராதவை என்கிற பெயரில் சாலைகளின் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழும், சிறப்பு பழுது பார்க்கும் பணிகள் என்ற பெயரில் ஒரே சாலை பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இ-பாதை திட்டத்தின் கீழ் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இனி வருங்காலங்களில் சாலை பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள தேர்வு செய்துள்ள சாலைகளின் பட்டியலை மாவட்ட கலெக்டர்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். அவர்கள் ஒப்புதல் அளித்த பிறகே  சாலைகளின் பராமரிப்பு பணிக்கு கண்காணிப்பு பொறியாளர்கள் நேரில் ஆய்வு செய்து, அதன்பிறகு நிதியை விடுவிக்க வேண்டும். இதன் மூலம் சாலை பராமரிப்பு பணி எந்த வித தாமதம் இல்லாமல் நடைபெற வழிவகுக்கும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: