ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணைய காலஅவகாசம் 4 மாதம் நீட்டிப்பு : தமிழக அரசு உத்தரவு

சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு கொடுக்கப்பட்ட கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், 7வது முறையாக 4 மாதம் காலநீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதா மர்ம மரணம் தொடர்பாக விசாரணை நடந்தத நீதிபதி ஆறுமுகச்சாமி தலைமையில் விசாரணை ஆணையம் கடந்த 2017 செப்டம்பர் 25ம் தேதி அமைக்கப்பட்டது. இந்த விசாரணை ஆணையம் 3 மாதத்திற்குள் விசாரணை முடித்து அறிக்கை தாக்கல் செய்யும் என்று தமிழக அரசு கூறியது. ஆனால், ஆணையத்தின் விசாரணை ஆணையத்துக்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இந்த விசாரணையில் ஜெயலலிதா அண்ணன் மகன் தீபக், மகள் தீபா, போயஸ் கார்டனில் வேலை செய்த ஊழியர்கள் உள்பட பல தரப்பிடம் விசாரிக்கப்பட்டது.

இறுதியாக சசிகலா, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரிடம் விசாரணை நடத்தி அரசிடம் அறிக்கை தாக்கல் செய்ய ஆணையம் திட்டமிட்டிருந்தது. இதற்கிடையில் உச்ச நீதிமன்றத்தில் ஆறுமுக ஆணைய விசாரணைக்கு அப்போலோ மருத்துவமனை இடைக்கால தடை பெற்றது.  

இந்த நிலையில் விசாரணைக்கு  கொடுக்கப்பட்ட கால அவகாசம் பிப்.24ம் தேதி முடிவடைந்த நிலையில் 7வது முறையாக 4 மாதம் கால நீட்டிப்பு செய்து ஜூன் 24 ம் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.  இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் சுமார் ஒரு வருடமாக ஆணையம் விசாரணை மேற்கொள்ளாமலேயே காலநீட்டிப்பு செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.  

Related Stories: