மாயமாகும் கப்பலை தேடுவது தொடர்பாக இந்தியா- ஆஸ்திரேலியா கூட்டு பயிற்சி தொடக்கம்

சென்னை: இந்திய கடலோர காவல் பல்வேறு நாட்டு கடலோர காவல் படையுடன் இணைந்து பல்வேறு கூட்டுபயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன்படி கப்பல் மீட்பு தொழில்நுட்பம் தொடர்பாக ஆஸ்திரேலியா எல்லை படை மற்றும் இந்திய கடலோர காவல் படை வீரர்கள் இணைந்து பயிற்சி மேற்கொண்டுவருகின்றனர்.

இந்திய கடலோர காவல் படையின் கிழக்கு பிராந்தியம் சார்பில் சென்னையில் 24 முதல் 28ம் தேதி வரை இந்த பயிற்சி நடைபெறுகிறது. இந்த பயிற்சியில் கிழக்கு பிராந்திய காமண்டர் பரமேஷ், ஆஸ்திரேலியா தூதர் சூசன் கிரேஸ், ஆஸ்திரேலியா எல்லை படையைச் சேர்ந்த டிம் சிப்பர்டு உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இரு நாட்டு உறவுகளை வலுப்படுத்தும் விதமாக நடைபெறும் இந்த பயிற்சியில் இந்திய கடலோர காவல் படை, ஆஸ்திரேலியா எல்லை படையைச் சேர்ந்த மொபைல் பயிற்சி குழு, சுங்கத் துறை, தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழுத்தைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: