தமிழகத்தில் 38 மாஜிஸ்திரேட்டுகள் சீனியர் சிவில் நீதிபதிகளாக பதவி உயர்வு

சென்னை: தமிழகம் முழுவதும் மாஜிஸ்திரேட்டுகளாக பணியாற்றி வந்த 38 பேருக்கு சீனியர் சிவில் நீதிபதிகளாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது: பாண்டிச்சேரி மாஜிஸ்திரேட்டாக இருந்த சிவக்குமார், பாண்டிச்சேரி மோட்டார் வாகன விபத்து தீர்ப்பாய சீனியர் சிவில் நீதிபதியாகவும், பூதப்பாண்டி மாஜிஸ்திரேட்டாக இருந்த விஜயகுமார் விழுப்புரம் 2வது கூடுதல் நீதிபதியாகவும், உத்திரமேரூர் மாஜிஸ்திரேட்டாக இருந்த இருதயராணி கடலூர் மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு சார்பு நீதிபதியாகவும்,  பாப்பிரெட்டிபட்டி மாஜிஸ்திரேட்டாக இருந்த சிவகுமார் நாகர்கோவில் மாவட்ட சட்டபணிகள் ஆணைகுழு செயலாளராகவும், கள்ளக்குறிச்சி மாஜிஸ்திரேட்டாக இருந்த லதா கள்ளக்குறிச்சி கூடுதல் சார்பு நீதிபதியாகவும், கிருஷ்ணகிரி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டாக இருந்த சுல்தான்  அர்பீன், தாம்பரம் சார்பு நீதிபதியாகவும், வைகுண்டம் மாஜிஸ்திரேட்டாக இருந்த ஜெயசுதா சென்னை ஜார்ஜ் டவுன் 8வது மாஜிஸ்திரேட்டாகவும், கும்மிடிப்பூண்டி மாஜிஸ்திரேட்டாக இருந்த அலிசியா எழும்பூர் மொபைல் கோர்ட் நீதிபதியாகவும்  தமிழகம் முழுவதும் மொத்தம் 38 பேர் பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதேபோல், கரூர் முதன்மை சார்பு நீதிமன்ற நீதிபதியாக இருந்த மலர்விழி, கரூர் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டாகவும், கும்பகோணம் முதன்மை சார்பு நீதிபதியாக இருந்த விஜயகுமார், கும்பகோணம் கூடுதல் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டாகவும், கும்பகோணம்  கூடுதல் சார்பு நீதிபதி பாலமுருகன் கும்பகோணம் முதன்மை சார்பு நீதிபதியாகவும், கடலூர் முதலாவது கூடுதல் நீதிபதியாக இருந்த மூர்த்தி கடலூர் முதன்மை சார்பு நீதிபதியாகவும், மானாமதுரை சார்பு நீதிபதியாக இருந்த உதயவேலன், சிவகங்கை லஞ்ச ஒழிப்புத்துறை நீதிமன்ற சிறப்பு நீதிபதியாகவும், கள்ளக்குறிச்சி கூடுதல் சார்பு நீதிபதி ராஜலிங்கம், கள்ளக்குறிச்சி முதன்மை சார்பு நீதிபதியாகவும், கரூர் கூடுதல் சார்பு நீதிபதியாக இருந்த சுந்தரய்யா கரூர் முதன்மை சார்பு நீதிபதி என 7 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: