பத்திரப்பதிவு துறை வருவாய் குறையும் நிலையில் கம்பெனிகளின் மறு சீரமைப்பை பதிவு செய்ய கட்டணம் நிர்ணயம்: பதிவுத்துறை செயலாளர் உத்தரவு

சென்னை: கம்பெனிகளின் மறு சீரமைப்பை பதிவு செய்ய கட்டணம் நிர்ணயம் செய்ய பதிவுத்துறை செயலாளர் பாலச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார். இந்திய கம்பெனி பதிவு சட்டம் 1956ன்படி எல்லா நிறுவனங்களும் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும். இந்த சட்டத்தின்படி கம்பெனி சரியாக இயங்குகிறதா என்று கண்காணிப்பது அதன் வேலை. அந்த நிறுவனங்களின் பங்குதாரர்கள் பங்குகளின் அளவை பொறுத்து அந்த நிறுவனத்தின் லாப நஷ்டங்கள் தீர்மானிக்கப்படுகிறது. இந்த  கம்பெனியின் சொத்தை, இன்னொரு கம்பெனி உடன் அந்த சொத்தை இணைக்கும் போதோ மற்றும்  கம்பெனியை மறுசீரமைப்பு செய்யும் போது கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும்.

அவ்வாறு பதிவு செய்யப்படும் கம்பெனிகளுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி கம்பெனி சொத்தை மாற்றி பத்திரம் பதிவு செய்யும் போது, அசையா சொத்துக்களின் சந்தை மதிப்பில் 2 சதவீதம் முத்திரை தீர்வையோ அல்லது கம்பெனியின் பங்கு (ஷேர்) மதிப்பில் 0.6 சதவீதத்திலோ இதில், எதன் மதிப்பு அதிகமோ, அதனடிப்படையில் கட்டணமாக பதிவுக்கு வசூலிக்க வேண்டும் என்று பதிவுத்துறை செயலாளர் பாலச்சந்திரன் உத்தரவிட்டு அரசாணை வெளியிட்டுள்ளார். அந்த அரசாணையில் கூறியிருப்பதாவது: கம்ெபனியை பதிவு செய்யும் அந்த கம்பெனி சொத்து மதிப்பில் அப்போதைய மதிப்பின் அடிப்படையில் தான் முத்திரை தீர்வை கட்டணம் வசூலிக்க வேண்டும்.

தமிழ்நாட்டை தவிர சொத்துக்கள் வேறு இடத்தில் இருந்தால் அதை ஏற்க கூடாது. கம்பெனி பதிவு செய்யும் அதன் வருவாய், கம்பெனியுடன் இணைக்கப்பட்டுள்ள சொத்து மதிப்பு உள்ளிட்டவை அடங்கிய தணிக்கை சான்றிதழ் பெற வேண்டும். மேலும், கம்பெனியின் பங்கு மதிப்பில் 0.6 சதவீதம் அல்லது கம்பெனியுடன் இணைக்கப்பட்டுள்ள சொத்தின் சந்தை மதிப்பில் எது அதிகமோ அதன் அடிப்படையில் பதிவுக்கான கட்டணம் வசூலிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. தற்போது பதிவுத்துறையின் வருவாய் சரிந்து வரும் நிலையில், கம்பெனிகளை பதிவு செய்ய கட்டணம் வசூலிப்பதன் மூலம் பத்திரப்பதிவுத்துறையின் வருவாய் மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது எனபதிவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories: