பெரியாறு அணைக்கு 10 நாட்களுக்குப்பின் 100 கனஅடி நீர்வரத்து

கூடலூர்: முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால் கடந்த பத்து நாட்களுக்கு முன் அணைக்கு நீர்வலத்து முற்றிலும் நின்றுபோனது. இந்நிலையில் இன்று காலை முதல் அணைக்கு வினாடிக்கு 100 கனஅடி தண்ணீர் வரத்து தொடங்கி உள்ளது. இன்று காலை நிலவரப்படி பெரியாறு அணையின் நீர்மட்டம் 115.80 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 100 கனஅடியாகவும், அணையிலிருந்து தமிழக பகுதிக்கு இறைச்சல்பாலம் வழியாக வினாடிக்கு 100 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது. அணையின் இருப்புநீர் 1871 மில்லியன் கன அடியாக உள்ளது.

வைகையின் நீர்மட்டம் 49.52 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து இல்லை. அணையிலிருந்து மதுரை குடிநீருக்காக வினாடிக்கு 60 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் இருப்புநீர் 1933 மில்லியன் கனஅடியாக உள்ளது.

சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 98.23 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 9 கனஅடியாகவும், அணையிலிருந்து வினாடிக்கு 25 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் இருப்பு நீர் 58.70 மில்லியன் கனஅடியாக உள்ளது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 42.85 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து இல்லை. நீர் வெளியேற்றமும் இல்லை. அணையின் இருப்புநீர் 223.94 மில்லியன் கனஅடியாக உள்ளது.

Related Stories: