கீழடியில் ஆறாம் கட்ட அகழாய்வு பணிகளை காணொளி மூலம் தொடங்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

சென்னை: சிவகங்கை மாவட்டம் கீழடியில் ஆறாம் கட்ட அகழாய்வு பணிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். சென்னை தலைமை செயலகத்தில் காணொளி காட்சி மூலம் முதல்வர் தொடங்கி வைத்தார். சிவகங்கை மாவட்டம் கீழடியில் கடந்த 2015ம் ஆண்டு மத்திய தொல்லியல் துறை அகழாய்வு பணிகளை மேற்கொண்டதில், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலான பழமை வாய்ந்த ஆயிரக்கணக்கான தொல்பொருட்கள் கிடைத்தன. 2018ம் ஆண்டு நடந்த நான்கு மற்றும் ஐந்தாம் கட்ட அகழாய்வில், கட்டட சுவர், உறைகிணறு, அரசு முத்திரை, பானை ஓடுகள், இரும்பு மற்றும் செப்புக்காசுகள், முத்து, பவளம் உள்ளிட்ட பழமையான பொருட்கள் கிடைக்கப் பெற்றன.

Related Stories: